மனப்பாடப் பாடல்கள்
1. மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
- ஒளவையார்
2. திருக்குறள்
(i)மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
(ii)வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
(iii)சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்.
3. கடலோடு விளையாடு
பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா
காயும்கதிர்ச் சுடற்கூரை – ஐலசா
கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா
மினனல்வரி அரிச்சுவடி – ஐலசா
பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா
முழுநிலவே கண்ணாடி – ஐலசா
மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா
தொழும்தலைவன் பெருவானம் – ஐலசா
துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா
No comments:
Post a Comment