Sunday, October 23, 2022

Samacheer Kalvi 8th Tamil Manappada Paguthi (தமிழ் 8 மனப்பாட பகுதி )

 1. தமிழ்மொழி வாழ்த்து 

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!


வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!


ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!


எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!

- பாரதியார் 



2. ஓடை 

ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்

உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்


பாட இந்த ஓடை எந்தப்

பள்ளி சென்று பயின்ற தோடி!

ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்யப் போரா ரோடி!


நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி

நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்

கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்

குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி


நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்

- வாணிதாசன் 



3. நோயும் மருந்தும் 

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி

தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை

ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்

பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே


4. வருமுன் காப்போம்

உடலின் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்;

இடமும் பொருளும் நோயாளிக்கு

இனிய வாழ்வு தந்திடுமோ?


சுத்தம் உள்ள இடமெங்கும்

சுகமும் உண்டு நீயதனை

நித்தம் நித்தம் பேணுவையேல்

நீண்ட ஆயுள் பெறுவாயே!


காலை மாலை உலாவிநிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவானே! 

-கவிமணி தேசிக விநாயகனார்

 


5. கல்வி அழகே அழகு 

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார். 

- குமரகுருபரர் 



6. பாடறிந்து ஒழுகுதல் 

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல். 

- நல்லந்துவனார்



7. திருக்குறள் 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும். 


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.


விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.


தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.

- திருவள்ளுவர் 




8. படை வேழம் 

வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி

மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்

இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்

இருவர் ஒருவழி போகல் இன்றியே


ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்

உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்

அருவர் வருவர் எனா இறைஞ்சினர்

அபயம் அபயம் எனநடுங்கியே. 

- செயங்கொண்டார் 



9. ஒன்றே குலம்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே


படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே. 

- திருமூலர் 

 


10. திருக்குறள்  

கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.


பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

- திருவள்ளுவர் 



No comments:

Post a Comment

Samacheer Kalvi English Memory Poems

 Memory Poems 1. 6th Standard 2 . 7th Standard 3. 8th Standard 4. 9th Standard 5. 10th Standard If there was any mistake in the poems please...